×

திருவள்ளூர் அருகே மின்விசிறியில் தூக்குப்போட்டு பிளஸ் 2 மாணவி தற்கொலை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சாரங்கன். இவரது மகள் வினோதினி (16). இவர் பேரம்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று காலை பள்ளி செல்வதற்கு தயாராகிக்கொண்டிருந்தார். இதன்பிறகு தனது அறைக்கு சென்ற அவர் நீண்டநேரமாக வராததால் தாய் சென்று அறைக்கதவை தட்டியும் திறக்கவில்லை.

இதனால் கதவை உடைத்து பார்த்தபோது வினோதினி மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்து கதறினார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மப்பேடு போலீசார் சென்று மாணவி சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குபதிவு செய்து மாணவி தற்கொலைக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tiruvallur ,Perambakkam ,Vinothini ,Government Girls Higher Secondary School ,
× RELATED சிறுமி வன்கொடுமை வழக்கில் தவெக பிரமுகர் கைது