சென்னை: ஆடு திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டவரை அரசு வழக்கறிஞராக நியமித்ததற்கு எடப்பாடி கண்டனம் தெரிவித்துள்ளார். கடிவாளம் இல்லாத குதிரை போல் தவெக ஆட்சி தறிகெட்டு ஓடுகிறது. தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்ததை வாக்குறுதிகளாக கூறிய தவெக, அதை நிறைவேற்ற முடியாமல் திணறுகிறது. மணலில் குழந்தைகள் வீடு கட்டி விளையாடுவது போல் தவெக ஆட்சியாளர்கள் விளையாட்டு காட்டி வருகிறார்கள். தவெக ஆட்சி தடுமாறுவது போல், நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் இல்லாமல் விசாரணை பாதிப்படைகிறது என்று எடப்பாடி குற்றம் சாட்டியுள்ளார்.
