சென்னை: டிஜிபி உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் மாவட்டம் மற்றும் மாநகர காவல்துறையினர் கடந்த 3ம் தேதி முதல் 5ம் ேததி வரையிலான 3 நாட்கள் நடந்த போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையில் தீவிர வாகன சோதனை மற்றும் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டது.
இந்த நடவடிக்கையில் வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வந்ததாக தனித்தனியாக 650 வழக்குகள் பதிவு செய்து, கஞ்சா வியாபாரிகள் உள்பட 621 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 296 கிரோ கஞ்சா, 1.3 கிலோ பிற போதை பொருட்கள், 802 போதை மாத்திரைகள், 6,653 தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
