போரை முடிக்க புடின், ஜெலன்ஸ்கி விரும்புகின்றனர் டிரம்ப் தகவல்

வாஷிங்டன்: உக்ரைனில் தற்போது ஐந்தாவது ஆண்டாகத் தொடரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து விவாதிக்க, வார இறுதியில் புடின் மற்றும் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் டிரம்ப் தனித்தனியாக பேசினார். அதை தொடர்ந்து டிரம்ப் கூறுகையில், ‘அதிபர் புடின் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறார்.

இதை நான் மிகவும் உறுதியாகச் சொல்வேன். அது ஒரு நல்ல பேச்சுவார்த்தை. அதிபர் ஜெலன்ஸ்கியும் இப்போது இது முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறார். நாங்கள் நேட்டோவிடம் சென்று இது குறித்துப் பேசவிருக்கிறோம்’ என்றார்.

 

Related Stories: