×

மாற்றுக் கட்சியினருக்கு பதவி வழங்க எதிர்ப்பு; ஆவடி தவெக எம்எல்ஏ ஆபீஸ் முற்றுகை: மாவட்ட செயலாளர் போர்க்கொடி

ஆவடி: மாற்றுக் கட்சியினருக்கு பதவி வழங்குவதாக கூறி, ஆவடி தவெக எம்எல்ஏ அலுவலகத்தை மாவட்ட செயலாளரின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் மாற்றுக் கட்சி நிர்வாகிகளை இணைந்து வருகின்றனர். இதனால் ஏற்கனவே கட்சியில் இருப்பவர்களுக்கும் புதிதாக கட்சியில் இணைகின்றவர்களுக்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஆவடி தவெக எம்எல்ஏ ரமேஷ்குமாருக்கும் மாவட்ட செயலாளராக உள்ள மணிகண்டனுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள், தவெகவில் இணையும் வேறு கட்சியினருக்குபொறுப்பு வழங்குவதாக வாக்குறுதி அளித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாற்று கட்சியை சேர்ந்த ஒருவருக்கு திருவேற்காடு பகுதியில் நகர செயலாளர் பதவி வழங்குவதாக எம்எல்ஏ ரமேஷ்குமார் உறுதி அளித்துவிட்டு வேறு ஒருவருக்கு அந்த பதவி வழங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கேட்பதற்காக மாவட்ட செயலாளர் ஆதரவாளர்கள் திருவேற்காடு பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் ஆவடியில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்துக்கு நேற்று மாலை 4 அளவில் வந்துள்ளனர். ஆனால் அவர்களை எம்எல்ஏ சந்திக்காமல் இரவு 9 மணி வரை காக்க வைத்துவிட்டு சென்றுவிட்டதாக தெரிகிறது.

இதனால் கடும் ஆத்திரம் அடைந்த மாவட்ட செயலாளரின் ஆதரவாளர்கள் திடீனெ எம்எல்ஏ அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் மாவட்ட செயலாளரின் ஆதரவாளர்கள் கூறுகையில்,’’தவெகவில் உழைப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை. புதிதாக கட்சியில் சேர்பவர்களுக்கு பதவி வழங்கப்படுகிறது. கட்சிக்காக உழைத்துவரும் எங்களுக்கு பதவி மறுக்கப்படுகிறது. புதியவர்களுக்கு பதவி வழங்கினால் எங்கள் பகுதிக்குள் அவர்களை நுழையவிடமாட்டோம்’’ என்றனர்.

Tags : Avadi Daweka ,MLA ,District Secretary ,Borkodi ,Avadi ,Avadi Taveka ,Takeka ,
× RELATED தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை...