திருவள்ளூர்: திருவள்ளூர் புழல் சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி வெள்ளைக்காளியை கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். புழல் மத்திய சிறையில் பிரபல ரவுடி வெள்ளைக்காளி தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். அதே சிறையில் கும்பகோணத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி லாலி மணிகண்டனும் அடைக்கப்பட்டுள்ளார். ரவுடி வெள்ளைக்காளியை கொலை செய்ய ரூ.1 கோடி வரை பேரம் பேசப்பட்டு ரூ.25 லட்சம் தந்தது கண்டுபிடிப்பு. சிறையில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் ரவுடி வெள்ளைக்காளியை கொலை செய்ய திட்டம் தீட்டியது அம்பலம். காவல்துறைக்கு தகவல் கிடைத்தவுடன் ரவுடியை கொல்ல திட்டமிட்ட 4 பேரை பிடித்து தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்ல திட்டம் தீட்டிய ரவுடி லாலி மணிகண்டன் சேலம் சிறைக்கும், மற்ற 3 பேர் கடலூர் சிறைக்கும் மாற்றம்
