- கந்தர்வகோட்டை உராத்சியா
- பெருராட்சியா
- கந்தர்வகோட்டை
- கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை மாவட்டம்
- சித்தல்
- கோத்தனார்
கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சியில் பத்து ஆயிரம் மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு எந்ததொரு தொழில்சாலையோ, பெரிய கல்வி நிறுவனங்களோ இல்லாத நிலையில் இப்பகுதி மக்கள் தினசரி சம்பளத்திற்கும், சித்தாள், கொத்தனார் போன்ற பணிக்கு சென்று குறைந்த ஊதியம் பெற்றும் வாழ்த்து வருகிறார்கள். மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டதை நம்பி தான் ஏராளமான குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் சில தினங்களாக கந்தர்வக்கோட்டை ஊராட்சி, பேரூராட்சியாக மாறிவிட்டது என கூறி எந்ததொரு பணியும் நடைபெறவில்லை.
தெரு லைட்கள், குடிநீர் வசதிகள் ஊராட்சி மன்றத்தில் நடைபெறவில்லை. மக்கள் கூறும் போது வீட்டு வரி ரசீது வாங்க சென்றால் கணக்குகள் இங்கு இல்லை எனக் கூறி அலைய விடுகிறார்கள். கந்தர்வகோட்டை நகரில் எந்ததொரு வருவாய் இல்லாத நிலையில் இது ஊராட்சியா அல்லது பேரூராட்சி என்ற திரிசங்கு நிலையில் உள்ளது. பொதுமக்கள் கூறும் போது கந்தர்வகோட்டை ஊராட்சியாகவே தொடர வேண்டும் என்று கூறுகிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு கந்தர்வகோட்டை நகரை ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கேட்டு கொள்கிறார்கள்.
