×

புழல், செங்குன்றத்தில் டிங்கரிங், மெக்கானிக் ஷெட்டில் தீ: லாரி எரிந்து சேதம்

புழல்: புழல் அருகே தண்டல்கழனியில் ஜிஎன்டி நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் குணசேகரன் என்பவர் வாகனங்களுக்கான டிங்கரிங் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. தகவலறிந்து செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர். துரித நடவடிக்கையால் மற்ற கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. எனினும், டிங்கரிங் கடையில் இருந்த இயந்திரங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமாகி விட்டன.

செங்குன்றம் அருகே புள்ளிலைன் ஊராட்சிக்கு உட்பட்ட ஆரோன் உல்லாச நகரில் கார், லாரி உள்பட பல்வேறு வாகனங்களை பழுதுபார்க்கும் சிறிய கடைகள் உள்ளன. இந்நிலையில், இங்குள்ள ஒரு லாரி மெக்கானிக் ஷெட் இன்று காலை திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதிலும் கரும்புகை சூழ்ந்ததில் மக்கள் கடும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டனர். தகவலறிந்து செங்குன்றம் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும், அந்த லாரி மற்றும் அங்கு போட்டு வைக்கப்பட்டு இருந்த அனைத்து வாகன உதிரிபாகங்களும் முற்றிலும் எரிந்து சேதமானது.

 

Tags : Puzhal ,Chengunram ,Lorry ,Gunasekaran ,GNT Highway ,Thandalkalani ,
× RELATED தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்...