×

மது வினியோக பட்டியலில் குளறுபடி..? வேலூர் டாஸ்மாக் மண்டல மேலாளர் சஸ்பெண்ட்

வேலூர்: வேலூர், திருப்பத்தூர் உள்ளடக்கிய வேலூர் டாஸ்மாக் மண்டலத்தில் 94 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த மண்டல மேலாளராக சத்யன் என்பவர் பணியாற்றி வந்தார். மேலும், ராணிப்பேட்டை மாவட்ட மேலாளராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். கடந்த சில வாரங்களாக டாஸ்மாக் குடோனில் இருந்து, கடைகளுக்கு செல்லும் மதுபானங்கள் பட்டியலில் மேலாளரான சத்யன், சரி பார்க்காமல், கையெழுத்திடாமல் மெத்தனமாக இருந்தாக கூறப்படுகிறது.

அதேபோல், குறிப்பிட்ட நிறுவனங்களின் மதுபானங்களை, டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பி வைத்ததாக தெரிகிறது. இதுகுறித்து புகார்கள் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அலுவலகத்திற்கு சென்றது. இதையடுத்து, வேலூர் டாஸ்மாக் மண்டல மேலாளர் சத்யனை சஸ்பெண்ட் செய்து, மேலாண்மை இயக்குனர் நந்தகுமார் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

அந்த உத்தரவில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட சத்யன், வேலூரில் இருக்க வேண்டும். அதிகாரிகளிடம் முன் அனுமதி பெறாமல், தலைமையகத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது என கூறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், வேலூர் டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலக வளாகத்தில், அனைத்து டாஸ்மாக் கடை பணியாளர்கள் சார்பில், மேலாளர் சத்யன் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெறக்கோரியும், நிர்வாகத்தை கண்டித்தும் ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Vellore ,TASMAC ,Tirupattur ,Sathyan ,Ranipet ,District ,TASMAC… ,
× RELATED தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்...