×

பயங்கரவாதத்திற்கு பாக். தொடர்ந்து ஆதரவு; சிந்து நதி நீர் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை: இந்தியா அதிரடி அறிவிப்பு

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 2025 ஏப்ரல் மாதம் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்கும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க இந்தியா முடிவு செய்தது. அப்போதிருந்து, எல்லை தாண்டிய நதிகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளுக்கு இந்தியாவின் இந்த முடிவு ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது என்று பாகிஸ்தான் சர்வதேச சமூகத்திடம் பொய் கூறி வருகிறது.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதை நிறுத்தும் வரை நிலைமையில் எந்த மாற்றமும் இருக்காது என்பதை வெளியுறவு அமைச்சகம் ேநற்று ெதாிவித்தது. இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று கூறியதாவது: சிந்து நதிநீர் ஒப்பந்தம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு நிலையானது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளித்து வருவதால் இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தனது எல்லை தாண்டிய பயங்கரவாத ஆதரவை நம்பகமான மற்றும் மாற்ற முடியாத வகையில் கைவிட வேண்டும். பயன்பாட்டில் இல்லாத சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின்கீழ் எந்தவொரு கடமையையும் நிறைவேற்ற இந்தியா இனி கடமைப்பட்டிருக்கவில்லை. இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Sindh River ,India ,New Delhi ,Bahalkam ,Jammu and ,Kashmir ,Pakistan ,
× RELATED 12 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில்...