×

தேர்தல்களின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் ஜனநாயக விரோத போக்கு நிறுத்தப்பட வேண்டும்: ஒன்றிய அமைச்சர் ரிஜிஜூ வலியுறுத்தல்

கொல்கத்தா: மேற்குவங்க பேரவைக்கு புதிதாக தேர்வாகியுள்ள உறுப்பினர்களுக்கான அறிமுக பயிற்சி முகாமின் தொடக்க விழாவில் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கலந்து கொண்டார்.

அப்போது பேசிய கிரண் ரிஜிஜூ, “இந்தியாவில் ஒரு பேரவை தொகுதியில் 3 லட்சம் வரையிலும், நாடாளுமன்ற தொகுதியில் 30 லட்சம் வரையிலும் வாக்காளர்கள் உள்ளனர். இதனால் தேர்தல் பிரசாரத்தின்போது கணிசமான செலவுகள் ஏற்படுகின்றன.
தற்போது ஒரு புதிய போக்கு உருவாகி உள்ளது. நாட்டின் சில பகுதிகளில், சில மாநிலங்களில் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய சூழல் உள்ளது. இது நல்லதல்ல. இத்தகைய ஜனநாயக விரோத நடைமுறை நிறுத்தப்பட வேண்டும். அடுத்தடுத்த தேர்தல்களிலும் வெற்றி பெறவோ, எம்எல்ஏவாகவோ, எம்பியாகவோ நீடிக்க விரும்பினால், நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் ” என்று தெரிவித்தார்.

Tags : UNION ,MINISTER ,RIJIJU ,KOLKATA ,KIRAN RIJIJU ,WESTERN COUNCIL ,India ,
× RELATED 12 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில்...