புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டைக்கு செல்லும் பேருந்து வழித்தடத்தை நீட்டித்து ஆதனக்கோட்டை, கருப்புடையான்பட்டி வழியாக அண்டக்குளம், கூத்தாச்சிபட்டி, பெருங்களூர், இச்சடி வழியாக செல்லக்கூடிய பேருந்தை புதுக்கோட்டை திமுக எம்எல்ஏ முத்துராஜா, கலெக்டர் அருணா ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் முகமது பர்வேஸ் நேற்று தொடங்கி வைத்தார். அதற்கு முன் பேருந்தில் கட்டப்பட்டிருந்த ரிப்பன் தவெக கொடி வண்ணத்தில் இருந்ததால் திமுக எம்எல்ஏ மற்றும் கலெக்டர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து கட்சிக்கொடி வண்ணத்தில் இருந்த ரிப்பன் மாற்றப்பட்டதும் அமைச்சர் பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக இலுப்பக்குடி பட்டியில் பேருந்து வழித்தட நீட்டிப்பு வசதியை அமைச்சர் முகமது பர்வேஸ் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். அந்த பேருந்தில் கட்டப்பட்டிருந்த ரிப்பனும் தவெக கொடி வர்ணத்தில் இருந்த நிலையில் அப்படியே தொடங்கி வைத்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
