நெல்லை: முன்னாள் சபாநாயகர் அப்பாவு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
தேர்தல் முடிவுகள் மே மாதம் 4 தேதி முடிவடைந்த இரவே திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பனையூருக்கு அழைத்து வந்து த.வெ.க கூட்டணியில் சேர்த்தவர் இன்றைய முதல்வர். தொடர்ந்து பாஜக கூட்டணியில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏக்களில் 25 பேரை கட்சியை தகர்த்து தனக்கு ஆதரவாக வாக்களிக்க வைத்தவர்.
அதேபோல் அமமுக தலைமைக்கு தெரியாமல் காமராஜ் எம்எல்ஏ கொள்முதல் செய்யப்பட்டு த.வெ.க-விற்கு ஆதரவாக வாக்களித்தார்.இன்று வரை பல அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து த.வெ.க-வில் இணைந்து வருகின்றனர். இத்தனை குற்றங்களையும் கைகட்டி வேடிக்கை பார்த்த தமிழக காவல்துறை, ஊத்தங்கரை இளையராஜா எம்எல்ஏ-விடம் போலியான புகார் மனு பெற்று திமுக-வின் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது நியாயமா?
இதுபோல் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புகார் மனு கொடுத்தால் நடவடிக்கை எடுப்பீர்களா? தற்போது தமிழகத்தில் செயல்படுவது தமிழக காவல்துறையா? அல்லது த.வெ.க காவல்துறையா? இவ்வாறு அவர் தனது எக்ஸ் தள பதிவில் கேள்வி எழுப்பி உள்ளார்.
