திருவள்ளூர்: பெரியபாளையம் இறால் ஆலையில் 2 டன் அமோனியா வாயு டேங்கர் லாரி மூலம் 2 நாளில் அகற்றப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அமோனியா வாயு பாதுகாப்பாக அகற்றப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆலையில் இருந்து 400 டன் இறால்கள் இதுவரை அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
