- சமாஜ்வாடி
- Velumani
- விஸ்வநாதன்
- அஇஅதிமுக
- சென்னை
- எஸ்.பி. வேலுமணி
- இபிஎஸ்
- கோயம்புத்தூர்
- சென்னை, ராயப்பேட்டை...
சென்னை: ஈபிஎஸ் தலைமையில் நடைபெறும் அதிமுக மகளிர் அணி கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி, விஸ்வநாதன் பங்கேற்கவில்லை. தன்னோடு உள்ளவர்களுக்கு மீண்டும் பொறுப்பு தரவில்லை என கோவையில் அதிமுக நிர்வாகிகளிடம் வேலுமணி பேசியிருந்தார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம் இன்று (ஜுலை 1) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டம் கட்சியின் வளர்ச்சி பணிகளில் மகளிரின் பங்கு குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
அதிமுகவில் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளுக்கு கடந்த வாரம் மீண்டும் பதவி வழங்கப்பட்டது. அதிமுக துணைப் பொதுச் செயலர்களாக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். ஆனால், எஸ்.பி. வேலுமணி ஆதரவாளர்களுக்கு மீண்டும் பதவி வழங்கப்படாததால் அவர் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் எஸ்.பி. வேலுமணி பேசும்போது, “என்னை நம்பி வந்தவர்களை விட்டுவிட்டு நான் மட்டும் பதவியை ஏற்க தயாராக இல்லை. என்னுடன் வந்த 30 மாவட்டச் செயலாளர்களுக்கு பதவி கொடுக்கவில்லை. நான் மட்டும் எப்படி துணைப் பொதுச் செயலர் பதவியை ஏற்க முடியும்?” என்று எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.
இந்த அதிருப்தி காரணமாகவே இன்று நடக்கும் மகளிரணி கூட்டத்தில் எஸ்.பி. வேலுமணி பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட நத்தம் விஸ்வநாதனும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
