×

மேற்கு வங்கத்தில் 77 இஸ்லாமிய சமூகங்களை OBC பட்டியலில் இருந்து பாஜக அரசு நீக்கியதற்கு TNTJ கடும் கண்டனம்

 

சென்னை: மேற்கு வங்கத்தில் 77 இஸ்லாமிய சமூகங்களை OBC பட்டியலில் இருந்து பாஜக அரசு நீக்கியதற்கு TNTJ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலப் பொதுச் செயலாளர் A.முஜிபுர் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மேற்கு வங்கத்தில் முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் அரசால் OBC பட்டியலில் சேர்கப்பட்ட 77 இஸ்லாமிய சமூகங்களை தற்போது ஆளும் பாஜக அரசு நீக்கியுள்ள செயல் என்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்த சமூகங்கள் நீக்கப்பட்டதற்கான பின்புலமும் 10 சதவீதத்திலிருந்து 7 ஆக குறைத்ததற்கான காரணமும் அறிவியல் பூர்வமாக இல்லை.

மாறாக இது பாஜகவின் முஸ்லீம் வெறுப்பையும், இந்துக்களின் ஓட்டை ஒரு பக்கம் குவிப்பதற்கான சித்துவேலையாகவே தெரிகின்றது. பிற்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் சமூகங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்பில் சம உரிமை வழங்குவதே இடஒதுக்கீட்டின் நோக்கம். அந்த அடிப்படையில் பல ஆண்டுகளாக OBC பயன்களை பெற்று வந்த சமூகங்களை திடீரென பட்டியலில் இருந்து நீக்குவது அவர்களின் வாழ்வாதாரத்தையும், எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கும் செயலாகும். மிக முக்கியமாக இந்த செயல் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.

இந்திய குடிமக்கள் அனைவரும் சமம் எனும் Article 14 க்கு நேர் மாறான செயல், எனவே, நீக்கப்பட்ட 77 இஸ்லாமிய சமூகங்களை மீண்டும் OBC பட்டியலில் உடனடியாக சேர்து, அவர்களின் உரிமையை மீட்டுத்தர உச்சநீதிமன்றம் இப்பிரச்சினையை தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : TNTJ ,BJP government ,OBC ,West Bengal ,Chennai ,NADU ,TAWAHEED ,JAMAAT STATE SECRETARY ,Mujipur Rahman ,West ,
× RELATED மருத்துவர்கள் அனைவரையும் தேசிய...