×

உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகள் உடனடி விசாரணை நடத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

 

சென்னை: மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட உதவிப் பேராசிரியர்கள் தேர்வு முடிவுகளில் பெரும் குளறுபடிகள் எழுந்துள்ளதாக வந்துள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் நடைபெறும் ஆசிரியர் நியமனங்களிலும் வெளிப்படைத்தன்மை, சமூக நீதியை நிலை நாட்டுதல் மற்றும் ஊழல் தடுப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

தமிழ்நாடு அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக உண்மை நிலையை அறிய மேற்கொள்ளவுள்ள நடவடிக்கையை அறிவிக்க வேண்டும், உதவிப் பேராசிரியர் நியமனங்களில் எழுந்துள்ள பிரச்னை மீது விரைவான விசாரணை நடத்தி முறைகேடுகள் இருப்பின் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தேர்வு முடிவுகள் பற்றிய ஐயங்கள் தெளிவுப்படுத்தப்பட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Marxists ,Chennai ,State Secretary ,Marxist Party ,Shanmugam ,Teachers Selection Board ,Tamil Nadu ,
× RELATED தேர்தலில் மக்கள் மிகப்பெரிய ஊழல்: அமைச்சர் பேச்சால் சர்ச்சை