முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் மாநாடு: சென்னை தலைமை செயலகத்தில் இன்று தொடக்கம்

சென்னை: முதல்வர் விஜய் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்றும், நாளையும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் மாநாடு நடக்கிறது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் முதல்வர் தலைமையில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மாநாடு நடைபெறுவது வழக்கம். இந்த மாநாட்டின்போது அரசின் நலத்திட்டங்கள், சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும். இந்நிலையில் விஜய் தலைமையில் தவெக அரசு அமைந்த பிறகு முதல் முறையாக ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் மாநாடு இன்றும், நாளையும் நடக்கிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று காலை 10.30 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. முதல் நாளான இன்று காலை மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்துகிறார். இதில் சட்டம்-ஒழுங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, பொது சுகாதாரம், போதையில்லா தமிழ்நாடு திட்டம்,

பழங்குடியினர் மற்றும் பட்டியலினத்தவர்களின் நலன், அவர்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது, முதியோர் நலன், சட்டவிரோத கனிம வளக் கொள்ளையை தடுப்பது, அனைத்து மதங்களின் வழிபாட்டு நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. அதை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர்களுடன் மட்டும் முதல்வர் விஜய் தனியாக ஆலோசனை நடத்துகிறார். இதில், 28 துறைகளின் செயல்திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.

தொடர்ந்து நாளை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை தொடர்பான திட்டங்கள் குறித்து ஐஎப்எஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. இதில், பசுமை தமிழ்நாடு திட்டம், வனப்பகுதிகளில் சாலை மேம்பாடு, வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவது, மனித -விலங்கு மோதல்களை தடுப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. மாநாட்டின் போது பல்​வேறு அறிவுறுத்​தல்​களை​யும், உத்​தர​வு​களை​யும் அப்போது முதல்வர் வழங்​கு​வார்​ என எதிர்​பார்க்​கப்​படுகிறது.

Related Stories: