தமிழகத்தில் தவெகவுடன் கூட்டணி காங். தலைவர்கள் பதவிக்காக யார் காலிலும் விழுவார்கள்: ஒன்றிய அமைச்சர் குமாரசாமி குற்றச்சாட்டு

பெங்களூரு: திமுக உடன் இருந்து தற்போது தவெக பக்கம் சாய்ந்தது போல் காங்கிரஸ் தலைவர்கள் தேவை ஏற்பட்டால் யாருடைய காலையும் பிடிப்பார்கள் என ஒன்றிய அமைச்சர் எச்.டி. குமாரசாமி விமர்சனம் செய்தார். ஒன்றிய கனரக தொழில் துறை அமைச்சர் எச்டி குமாரசாமி பெங்களூருவில் கூறியதாவது:

தமிழ்நாட்டில் கடந்த பல வருடமாக காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணியில் இருந்தது. தற்போது அதிகாரம் கிடைக்கிறது என்பதற்காக திமுக கூட்டணியில் இருந்து தவெக கட்சிக்கு சென்று விட்டது. தேவை ஏற்பட்டால் காங்கிரசார் யாருடைய காலையும் பிடிப்பார்கள் என்பது இதன் மூலம் மீண்டும் உறுதியாகியுள்ளது என்றார்.

Related Stories: