மேட்டூர்: தமிழக-கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில், நீர்வரத்து கடந்த 2 நாட்களாக 300 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று காலை 200 கனஅடியாக சரிந்தது. அதேசமயம், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து, தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் 193 கனஅடியாக நீடித்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. வரத்தை காட்டிலும் நீர் திறப்பு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 79.09 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 79 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 40.96 டிஎம்சியாக உள்ளது.
