காங்கயம் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்

 

காங்கயம், ஜூன் 25: காங்கயத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்தில் இருந்து தூய்மை பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் நியமித்து வேலை செய்து வருகின்றனர். சுமார் 70 ஊழியர்கள் கடந்த மூன்று மாதங்களாக வேலை செய்து வரும் நிலையில் இதுவரை ஒரு மாதம் சம்பளம் மட்டுமே கொடுத்துள்ளதாகவும், மாதம் சம்பளம் ரூ.14 ஆயிரம் என கூறி ரூ.11 ஆயிரம் மட்டுமே கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. எனவே ஒப்பந்த பணியாளர் சுமார் 40 பேர் காலை வழக்கம்போல் வேலைக்கு வந்துவிட்டு காங்கயம் அரசு மருத்துவமணை முன்பு அமர்ந்து நேற்று காத்திருப்பு போரட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களுடன் தனியார் நிறுவன மேலாளர் பிரபு மற்றும் காங்கயம் தலைமை மருத்துவர் தியாகராஜன் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். கூடிய விரைவில் தீர்வு காணப்படும் என கூறியதன் அடிப்படையில் அனைவரும் பணிக்கு சென்றனர். இந்த நிலையில் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு இடையூறாகவும், அடிப்படை வசதிகளும் நடைபெறாமல் இருந்ததால் காங்கயம் அரசு மருத்துவமனையில் சலசலப்பு ஏற்பட்டது. தரம் உயர்த்தப்பட்ட அரசு மருத்துவமனையில் தொடர்ச்சியாக மருத்துவர்கள், பணியாட்கள் பற்றாக்குறையும் இருந்து வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

 

Related Stories: