×

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கை என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கண்டனம்

 

சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கை என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கண்டனம் தெரிவித்துள்ளார். கட்சி நிதி என்ற குற்றச்சாட்டை முதல்வர் வைத்தபோது சட்டமன்றத்தில் ஆதாரத்துடன் பேசுங்கள் என்று கூறினேன். முதலமைச்சர் விஜய்யை கேள்வி கேட்டதால் என் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியுள்ளது. ரெய்டு நடத்தி எங்களை அச்சுறுத்தலாம் என்று தவெக அரசு நினைக்கிறது; சோதனைகளுக்கு அஞ்சமாட்டோம். எனக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் ரூ.40 லட்சம் பறிமுதல் என்பது பொய்; நீதிமன்றம் சென்று நிரபராதி என்று நிரூபிப்பேன் என்றும் கூறினார்.

Tags : minister ,Chennai ,Former Minister ,Chief Minister ,Vijay ,
× RELATED கோவை அருகே வீடு புகுந்து 3 கோழிகளை தூக்கிச் சென்ற சிறுத்தை