×

சேலம்-ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ‘டைல்ஸ்’ ஏற்றி வந்த வாகனம் சென்டர் மீடியனில் மோதி விபத்து: போக்குவரத்து பாதிப்பு

 

ஆத்தூர்: ஆத்தூர் அருகே டைல்ஸ் லோடு ஏற்றி வந்த சரக்கு வாகனம் விபத்துக்குள்ளானதில், சேலம்-தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கு ெசாந்தமாக சரக்கு வாகனம் உள்ளது. இந்த வாகனத்தை அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்பவர் வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். நேற்று பெரம்பலூரில் இருந்து வாகனத்தில் ‘டைல்ஸ்’ லோடு ஏற்றி கொண்டு, சேலம் மாவட்டம் வாழப்பாடி நோக்கி சூர்யா மட்டும் தனியாக புறப்பட்டுள்ளார்.

ஆத்தூர் அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலை காட்டுக்கோட்டை பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் பின்புற சக்கரங்கள் இரண்டும் கழண்டு வாகனம் நடு ரோட்டில் நின்றது. அதிர்ஷ்டவசமாக பின் தொடர்ந்து எந்த வாகனமும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சூர்யா காயங்களின்றி தப்பினார். தகவல் அறிந்த தலைவாசல் போலீசார், விரைந்து வந்து, விபத்தில் சிக்கிய வாகனத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags : SALEM ,-AUTUR NATIONAL ,Atur ,Salem-National Highway ,Aathur ,MUTHKUMAR ,PERAMBALUR DISTRICT ,
× RELATED ராணிப்பேட்டை அருகே மலைப்பகுதியில்...