வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை மீன்பிடி துறைமுகம் அருகே ஒரு கிமீ தொலைவில் உள்ள கடற்கரையில் 75 கிலோ எடை கொண்ட டால்பின் மீன் இன்று காலை இறந்து கரை ஒதுங்கியது. இதை பார்த்த மீனவர்கள், வேதாரண்யம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கரை ஒதுங்கிய டால்பினை மீட்டு அங்கேயே குழிதோண்டி புதைத்தனர். மேலும் படகில் அடிபட்டு டால்பின் இறந்து கரை ஒதுங்கியதா அல்லது மீனவர்கள் வலையில் சிக்கி இறந்ததா என்று விசாரித்து வருகின்றனர்.
