டெல்லி: ஈரானுக்கு எதிரான தாக்குதல்களுக்கு அமெரிக்காவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் நேரடியாக உதவியதாக டெல்லியில் நடைபெறும் BRICS NSA கூட்டத்தில் ஈரான் பிரதிநிதி பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மை, ஒத்துழைப்புக்கு ஐக்கிய அரபு அமீரகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் ஈரான் பிரதிநிதி காதிர் நெசாமிபூர் கூறினார்.
