×

ஆசிரியர் தகுதித் தேர்வு முறைகேடு வழக்கு: 18 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

சென்னை: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக, தமிழகத்தில் 18 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் 18 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அரசுப் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டித் தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக, தேர்வு எழுதியவர்கள் புகார் செய்தனர். இந்த புகாரின் அடிப்படையில், 199 பேர் போட்டித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மாற்றப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, போட்டித் தேர்வின் விடைத்தாள்களை திருத்திய தனியார் நிறுவனத்திடம் போலீசார் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், பாலிடெக்னிக் விரிவுரையாளர் முறைகேடு தொடர்பாக, கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை ஒன்றிய குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

Tags : Enforcement Department ,Chennai ,Tamil Nadu ,Coimbatore ,Madurai ,Trichy ,
× RELATED மனுநீதி நாள் முகாமில் அளிக்கப்படும்...