- கோயம்புத்தூர்
- கோயம்புத்தூர் கலெக்டர்
- மருத்துவ பணியாளர்கள் சங்கம்
- பொதுச்செயலர்
- மகா லட்சுமி
- மக்கள் நலத்துறை
- தமிழக அரசின்
- துறை
கோவை : கோவை கலெக்டர் அலுவலகம் முன் மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கம் சார்பில் பொது செயலாளர் மகாலட்சுமி தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் பங்கேற்றவர்கள் கூறியதாவது:
தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு துறையின் மக்களைத்தேடி மருத்துவ திட்டத்தில் சர்க்கரை நோய் பரிசோதனை, மருந்து பெட்டகம் வீடுகளுக்கு சென்று வழங்குதல் போன்ற பணியில் கடந்த 5 ஆண்டுகளாக மாதந்தோறும் ரூ.5,500 ஊக்க தொகை அடிப்படையில் பணியாற்றி வருகிறோம்.
கடந்த அரசு பொறுப்பில் இருந்த போது நேஷனல் ஹெல்த் மிஷன் ஒப்பந்த ஊழியர்கள் 42 ஆயிரம் பேருக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது புதிய அரசு அமைந்துள்ளது. இந்த அரசு இதுவரையிலும் 13225 மக்களை தேடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவில்லை.
கடும் விலைவாசி உயர்வு,கல்வி, மருத்துவ செலவுகளை ஈடுகட்ட முடியாமல் வாழ்க்கையை போராட்டகரமாக நடத்தி வருகின்றனர். பெண்கள் நலன் அரசாக தங்களை அடையாளப்படுத்தும் தமிழக வெற்றி கழக அரசு உடனடியாக மாதம் ரூ.15 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும்.
எங்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. ஊதியம் வழங்க மகளிர் மேம்பாட்டு நிறுவனத்துக்கு ரூ.5 கோடி காசோலை அனுப்பப்பட்டது. ஆனால் 10 தினங்களுக்கும் மேலாகியும் ஊதியம் வழங்கப்படவில்லை.
மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும். சம்பளம் வழங்க காலதாமதத்தை தவிர்க்க வேண்டும். நடைமுறைக்கு மாறாக ஊழியர்களுக்கு வேலைப்பளு வழங்குவதை உடனே நிறுத்த ண்டும்.
எழுத்துப்பூர்வமான உத்தரவை அனைத்து மாவட்ட சுகாதார துறைக்கும் அனுப்பி அமலாக்கம் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். முன்னதாக கோரிக்கை தொடர்பாக கலெக்டரிடம் மனு அளித்தனர்.
