தருமபுரி: காரன்கொட்டாய் பகுதியில் லட்சுமி (50) என்பவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த லட்சுமியை அரிவாளால் வெட்டிக் கொன்ற மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. லட்சுமியை வெட்டிக் கொன்றுவிட்டு அவரது உடலை விவசாய நிலத்தில்தூக்கி வீசிவிட்டு தப்பியோடிவிட்டனர். லட்சுமி கொலை வழக்கில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
