×

தமிழகத்தில் நீட் தேர்வை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்: ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு

நீட் தேர்வை குளறுபடி இல்லாமல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் அறிவுரை வழங்கியுள்ளார். நீட் மறு தேர்வு நாளை நடைபெறும் நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்திற்கான மேலிட கண்காணிப்பு அதிகாரியாக மாலதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் 307 மையங்களில் நீட் மறுதேர்வு நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 1,42,489 மாணவர்கள் நீட் மறுதேர்வு எழுதுகின்றனர்.

Tags : Tamil Nadu ,Chief Secretary ,Malita ,
× RELATED தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே...