×

தீயணைப்புத்துறை ஆணையத்தின் தலைவராக தீயணைப்புத்துறை டிஜிபி சீமா அகர்வால் நியமனம்: உள்துறை செயலாளர் மணிவாசன் உத்தரவு

 

சென்னை: தீயணைப்புத்துறை ஆணையத்தின் புதிய தலைவராக தீயணைப்புத்துறை டிஜிபி சீமா அகர்வால் கூடுதல் பொறுப்பாக நியமனம் உள்பட 3 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக உள்துறை செயலாளர் மணிவாசன் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறை டிஜிபியாக உள்ள சீமா அகர்வால் கூடுதல் பொறுப்பாக தீயணைப்பு துறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல், தமிழ்நாடு ஆயுதப்படை டிஜிபியாக இருந்த சந்தீப் மிட்டல் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரிய தலைவராகவும், சென்னை ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமி இயக்குநராக இருந்த கூடுதல் டிஜிபி தினகரன் ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Fire DGP ,Seema Agarwal ,Fire Service Commission ,Home Secretary ,Manivasan ,Chennai ,Tamil Nadu ,Tamil Nadu… ,
× RELATED நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சேலம்...