புதுடெல்லி: டெல்லியில் நடந்த ஸ்மார்ட் கிடங்கு அமைப்பை ஒன்றிய உணவுத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் பிரஹலாத், பொது விநியோகத் திட்டத்தின் பட்டியலில் இருந்து சில மாநில அரசுகள் 2.21கோடி தகுதியற்ற பயனாளிகளை நீக்கியுள்ளது. பொது விநியோகத்திட்டத்தின் டிஜிட்டல் மயமாக்கல் காரணமாகவே இந்த நடவடிக்கை சாத்தியமானது. மாநிலங்கள் தகுதியான பயனாளிகளை சேர்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநில அரசுகளால் தகுதியுள்ள மக்களுக்கு மேலும் 3 கோடி ரேஷன் அட்டைகளை வழங்க முடியும்” என்றார்.
