×

தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் மீண்டும் நாளை கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்

புதுடெல்லி: அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலை கழகத்தில் பயின்று வரும் அபிஜித் தீப்கே என்பவர், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற சமூக ஊடக கட்சியை கடந்த மாதம் தொடங்கினார். ஒன்றிய அரசின் நீட் தேர்வு குளறுபடி, சிபிஎஸ்இ ஓஎஸ்எம் முறைகேடு ஆகியவற்றில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி கவனம் செலுத்த தொடங்கியதுடன், கல்வித்துறை முறைகேடுகளுக்கு பொறுப்பான ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி வருகிறது.

கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடந்தது. இந்நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் நாளை மீண்டும் போராட்டம் நடத்த சிஜேபி முடிவு செய்துள்ளது. இதற்காக டெல்லி காவல்துறையிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்து உள்ளனர்.

Tags : Cockroach Party ,Delhi ,Dharmendra Pradhan ,New Delhi ,Abhijit Deepke ,Boston University ,US ,Cockroach Janata Party ,Union government ,CBSE ,OSM ,
× RELATED 177 டிஎம்சி நீர் திறக்க உறுதி;...