×

கொடைக்கானலில் பேரிக்காய் விளைச்சல் பாதிப்பு: விவசாயிகள் கவலை

 

கொடைக்கானல்: கொடைக்கானல் பகுதியில் பேரிக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பள்ளங்கி, வில்பட்டி, பிரகாசபுரம், செண்பகனூர், சின்னபள்ளம், பெரும்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் பேரிக்காய் சாகுபடி நடைபெறும். இங்கு நாட்டு பேரிக்காய், ஊட்டி பேரிக்காய், வால் பேரிக்காய், முள் பேரிக்காய் போன்றவைகள் விளைக்கப்படும்.

இங்கு அறுவடை செய்யப்படும் பேரிக்காய்கள் திண்டுக்கல் மாவட்டமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரள மாநிலத்திற்கும் அனுப்பி வைக்கப்படும். நடப்பாண்டில் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நாட்டு பேரிக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது சீசன் துவங்கியதையடுத்து பேரிக்காய் அறுவடை நடந்து வருகிறது. இந்த வருடம் மழை குறைவு மற்றும் பருவ நிலை மாற்றத்தினால் பேரிக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் கிலோ ரூ.80க்கு விற்பனையான நிலையில், இந்த வருடமும் கிலோ ரூ.80 முதல் ரூ.85 வரை விற்பனையாகிறது. நல்ல விலை இருந்தும் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பேரிக்காய் விளைச்சல் பாதிப்பு குறித்து தோட்டக்கலைத்துறை கவனம் செலுத்தி போதிய ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kodaikanal ,Princess of the Mountains ,Godaikanal ,Valangi ,Vilpatty ,Prakasapuram ,Chenpaganur ,Chinnadolam ,Arulam ,
× RELATED கூடலூர் அருகே ரேஷன் கடையை உடைத்து சூறையாடிய காட்டு யானை