கரூர்: கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தில் இருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மனைவி, குழந்தை காணாமல்போனதாக தந்த புகாரில் நடவடிக்கை இல்லை என ரங்கராதன் என்பவரும், நிலப்பிரச்சனை தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என காளீஸ்வரி என்பவரும் ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் இருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
