சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்று நட்டு பராமரிப்பு

கரூர், ஜூன் 15: இந்த உலகம் முழுவதும் பூமி மாசுபடுவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக உலக சுற்றுச்சூழல் அனுசரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு பந்துவீச்சாளர் ஒரு ரன் இல்லாத பந்துவீசினால் இந்தியா முழுவதும் உள்ள காடுகளில் ஒருரன் இல்லாத பந்துக்கு 50 மரக்கன்றுகள் வீதம் நடப்பட்டு காடுகள் பராமரிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் டாட்டா ஐபிஎல் கிரிக்கெட்டொடு ஒப்பந்தம் செய்து மரக்கன்று நடப்பட்டு வருகிறது.

இதில் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் ஆஸ்துமா அலர்ஜி ஆராய்ச்சி மையம் சார்பில் அதன் தலைமை டாக்டர் ஜி கமல் கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டு சமுதாயப் பணி ஆற்றி வருகிறார்.இதன் அடிப்படையில் ஜென்ஏஆர்சி பள்ளி வளாகத்தில் ஏராளமான மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதுடன், உறவினர் நண்பர்கள் மற்றும் தரிசு நிலங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியர் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு பராமரித்தனர்.

 

Related Stories: