- பாதுகாப்பு அமைச்சர்
- ராஜ்நாத் சிங்
- ஹைதெராபாத்
- ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பு
- ஜுன்னபால்
- ஏர்
- படை அகாடமி
- தெலுங்கானா
ஐதராபாத்: தெலங்கானா மாநிலம் ஐதராபாத்துக்கு அருகே உள்ள துண்டிக்கல் விமான படை அகாடமியில் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது: முன்பெல்லாம், போர்க்களத்தில் வல்லரசு நாடுகளுக்குத் தீர்க்கமான மேன்மை இருந்தது போல் தோன்றியது.
ஆனால் இப்போது, சிறிய நாடுகள்கூடத் தங்களின் சிறிய, அபாயகரமான ஆயுதங்கள் மற்றும் புது தந்திரங்களைக் கொண்டு பெரும் இழப்புகளை ஏற்படுத்த முடியும். நான் இதையெல்லாம் உங்களிடம் கூறுவதன் நோக்கம், நீங்கள் எந்த விதமான போருக்கும் மனதளவில் தயாராக இருக்க வேண்டும். போரின் வரையறை பெருமளவில் மாறியுள்ளது. புதிதாகப் பொறுப்பேற்கும் அதிகாரிகள் நவீனப் போர்முறையையும் அதன் உத்திகளையும் புரிந்துகொண்டு, அவற்றை மாற்றியமைத்து, ஏற்றுக்கொண்டு, தேவைப்பட்டால் திருத்த வேண்டும்.
விமானப்படை கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு உத்வேகத்தின் ஊற்றாக விளங்குகிறது. விமானப்படையில் அதிகாரிகளாகப் பொறுப்பேற்ற பெண் விமானிகளுக்கு வாழ்த்துக்கள். அவர்களின் அதிகரித்து வரும் எண்ணிக்கை விமானப்படையை சக்திவாய்ந்ததாகவும், சமநிலையானதாகவும், வலுவானதாகவும் ஆக்குகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
