- கே. வி. சமஸ்கிருதம்
- ஒன்றிய கல்வி அமைச்சு
- புது தில்லி
- காந்திரிய வித்தியாலயம்
- கே. வி.) பள்ளிகள்
- யூனியன் மாநிலத்தின் கல்வி அமைச்சகம்
- கே.வி
- கே. வி. பள்ளிகள்
புதுடெல்லி: கேந்திரிய வித்யாலயா (கே.வி.) பள்ளிகள் ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் தன்னாட்சி அமைப்பாகும். இந்த நிலையில்,மே 29 அன்று கேந்திரிய வித்யாலயா அமைப்பு அனைத்து கே.வி. பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், அனைத்து கே.வி.பள்ளிகளும் மூன்றாம் மொழி கட்டமைப்புக்காக மாணவர்கள் மற்றும் பெற்றோரிடமிருந்து கருத்துகளைக் கேட்கும் செயல்முறையை நிறைவு செய்திருக்க வேண்டும்.
மூன்றாவது மொழியானது, ஆர்-1(இந்தி) மற்றும் ஆர்-2(ஆங்கிலம்) மொழிகளிலிருந்து வேறுபட்ட, அட்டவணைப்படுத்தப்பட்ட மொழிகளில் ஒன்றாவது சமஸ்கிருதமாகவோ அல்லது பிராந்திய,மாநில மொழி இருக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப சமஸ்கிருதம் அல்லது பிராந்திய மொழியைத் தேர்ந்தெடுக்கலாம். ஒரே ஒரு பிரிவு உள்ள பள்ளியில், குறைந்தபட்சம் 15 மாணவர்கள் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு, சமஸ்கிருதம் மற்றும் வட்டார மொழிகளுக்கென தனித்தனிப் பிரிவுகள் அமைக்கப்படலாம்.
இரண்டு பிரிவுகளைக் கொண்ட பள்ளிகளில், ஒரு சமஸ்கிருதப் பிரிவும் ஒரு வட்டார மொழிப் பிரிவும் வைக்கப்படலாம். மூன்று பிரிவுகளைக் கொண்ட பள்ளிகளில், ஒவ்வொரு மொழியையும் தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் சமஸ்கிருத மற்றும் வட்டார மொழிப் பிரிவுகளின் பங்கீட்டைத் தலைமை ஆசிரியர்கள் தீர்மானிக்கலாம். இருப்பினும், ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம் ஒரு சமஸ்கிருதப் பிரிவு கட்டாயமாகும். இவ்வாறு சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது.
