வீடு புகுந்து நள்ளிரவில் உடற்பயிற்சி மைய பெண் பொறுப்பாளருக்கு தவெக செயலாளர் பாலியல் தொந்தரவு

சென்னை: மகளிர் உடற்பயிற்சி பெண் பொறுப்பாளரின் பணி நீட்டிக்க வேண்டும் என்றால், தன்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என நள்ளிரவில் வீடு புகுந்து பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், தலைமறைவான தவெக செயலாளர் வேம்புலியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஆலந்தூர் மாதவபுரத்தை சேர்ந்தவர் விமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவனை இழந்த இவர், சென்னை மாநகராட்சி 160வது வட்டத்தில் மகளிர் உடற்பயிற்சி மைய பொறுப்பாளராக உள்ளார். கடந்த ஆட்சியின் போது நியமிக்கப்பட்டவர். தற்போது ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட விமலாவை, ஆலந்தூர் வடக்கு பகுதி தவெக செயலாளர் வேம்புலி என்பவர், ‘நீ இந்த பதவியில் நீட்டிக்க வேண்டும் என்றால், என்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்’ என்று கட்டாயப்படுத்தியுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து திட்டியுள்ளார்.

அதேநேரம் விமலாவுக்கு இந்த பணியால் மாதம் ரூ.12 ஆயிரம் வரை ஊதியம் கிடைப்பதாக கூறப்படுகிறது. அடுத்த மாதத்திற்கான ஊதியத்தை விமலாவுக்கு கொடுக்க கூடாது என்று வேம்புலி பல வகையில் அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். தினமும் மகளிர் உடற்பயிற்சி மையத்திற்கு வந்து, விமலாவிடம் ‘இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகவில்ைல. உனக்கு வேலை வேண்டும் என்றால் என்னுடன் வா… இல்லை என்றால் வேலை உனக்கு இல்லை’ என் கூறி மிரட்டியுள்ளார். எதற்கும் அசையாத அவர், வேம்புலியின் ஆசைக்கு இணங்கவில்லை இதற்கிடையே விமலா வீட்டின் கதவை நள்ளிரவு 12 மணி முதல் 2 மணி இடைவேளையில் கடந்த ஒரு வாரமாக தவெக செயலாளர் வேம்புலி தட்டி உல்லாசத்திற்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த தவெக செயலாளர் வேம்புலி கடந்த 9ம் தேதி நள்ளிரவு யாருக்கும் தெரியாமல் விமலா வீட்டிற்குள் புகுந்து தன்னுடன் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த விமலா, இதை இனியும் கண்டிக்கவில்லை என்றால், வீட்டின் அருகில் இருப்பவர்கள் என்னை தவறான நபராக கூறுவார்கள் என்று சத்தம் போட்டு வெளியே அனுப்பியுள்ளார். இதை அருகில் இருந்தவர்களும் பார்த்ததாக கூறப்படுகிறது.

பின்னர் சம்பவம் குறித்து விமலா பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆளுங்கட்சி நிர்வாகி என்பதால், போலீசார் தவெக செயலாளர் மீது பாலியல் புகார் மீது வழக்கு பதிவு செய்வதற்கு முன்பு, அதற்கான வலுவான ஆதாரங்கள் தேவை என்பதால், போலீசார் விமலா வசித்து வந்த தெருவில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் மகளிர் உடற்பயிற்சி மையம் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை எடுத்து விசாரணை நடத்திய போது, தவெக செயலாளரான வேம்புலி நள்ளிரவு நேரத்தில் ெதருவில் மக்கள் நடமாட்டம் இல்லாத போது, விமலா வீட்டின் அருகே வந்து சென்றது உறுதியானது. மேலும் உடற்பயிசி மையத்திற்கும் வந்து விமலாவிடம் பேசி விட்டு சென்றதும் தெரியவந்தது.
அதைதொடர்ந்து பரங்கிமலை போலீசார் ஆலந்தூர் வடக்கு பகுதி தவெக செயலாளரான வேம்புலி மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேநேரம் இந்த விஷயம் பெரிய அளவில் பரவியதால், பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்து தொந்தரவு செய்த தகவலும் தவெக மேலிடத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அதைதொடர்ந்து தவெக மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான ஈசிஆர் சரவணன், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக செயலாளர் பொறுப்பு மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து வேம்புலியை நீக்கி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தன்னை கட்சி காப்பாற்றாததால் எப்படியும் தன்னை போலீசார் கைது செய்துவிடுவார்கள் என்று வேம்புலி தலைமறைவாகிவிட்டார். இதனால் வேம்புலியை கைது செய்ய பரங்கிமலை போலீசார் தனிப்படை அமைத்து அவரது செல்போன் சிக்னல் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

Related Stories: