ஓடும் தனியார் சொகுசு பேருந்தில் பெண்ணிடம் பாலியல் சீண்டல் வாலிபர் கைது: தர்மஅடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொது மக்கள்; சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உறங்கிறதா பொது மக்கள் கேள்வி

 

வடலூர்: ஓடும் தனியார் சொகுசு பேருந்தில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை பொதுமக்கள் தர்மடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பாண்டிச்சேரியை அடுத்து ஒரு பகுதியை சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவர் செவிலியர் படிப்பை முடித்துவிட்டு கோவைக்கு வேலைக்காக நேர்காணல் சென்றுள்ளார். பின்னர் நேர்காணலை முடித்து விட்டு புதன்கிழமை இரவு சுமார் 11 மணி அளவில் கோவையில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் தனியார் சொகுசு பேருந்தில் பயணித்துள்ளார்.

அப்போது அந்தப் பேருந்து ஈரோடு சென்றபோது 39 வயதுடைய வாலிபர் ஒருவர் மது போதையில் பேருந்தில் ஏறி அந்த பெண்ணின் பின்புறம் உள்ள இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார். பின்னர் பேருந்து வியாக்கிழமை காலை 4.30 மணியளவில் விருத்தாசலம் அடுத்து வரும் போது அந்த வாலிபர் முன் இருக்கையில் அமர்ந்து இருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து பேருந்து வடலூர் வந்த போது அந்தப் பெண் கத்தி கூச்சலிட்டு பேருந்தை நிறுத்தி உள்ளார்.இதையடுத்து அந்த வாலிபரை பேருந்தில் இருந்து கீழே இறக்கி விட்டு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் அங்கு இருந்த பொதுமக்கள் ஒன்று கூடி தர்ம அடி கொடுத்து வடலூர் காவல் நிலையத்தில் அழைத்து வந்து ஒப்படைத்தனர். வடலூர் காவல் நிலையத்தில் அந்த வாலிபர் மீது பெண் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் கடலூர் வண்ணாரபாளையம் பட்டா தோப்பு கே கே நகர் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் ஜீவானந்தம் 39 ; இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. மேலும் கடலூரில் இருந்து குடும்பத்தை காலி செய்து விட்டு தற்போது ஈரோடு அருகே நம்பியூர் கிராமத்தில் குடும்பத்துடன் தங்கி விவசாயம் செய்து வருகிறார். மேலும் கடலூரில் தங்கி இருந்தபோது பிள்ளைகள் அங்குள்ள பள்ளியில் படித்துள்ளார்கள் அவர்களின் கல்விச் சான்றிதழ் (TC) பெறுவதற்காக ஈரோட்டில் இருந்து கடலூர் வந்துள்ளார்.

அந்த சமயத்தில் பேருந்தில் முன்னால் இருக்கையில் அமர்ந்திருந்த அமர்ந்திருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ஜீவானந்தத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் கடந்த 9ம் தேதி சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை துவக்கி வைத்து பேசிய முதல்வர் விஜய் தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும். அதற்கான முதல் படிதான் இந்த திட்டம் எனவும் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி உறுதி அளித்த மூன்றே நாட்களில் இது போன்ற பாலியல் சீண்டல் நடைபெறுவதால் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார் உறக்கத்தில் உள்ளார்களா என பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது

Related Stories: