உளுந்தூர்பேட்டை அருகே நெடுஞ்சாலையில் கார் மோதிய விபத்தில் 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே மேட்டத்தூர் பகுதியில் நெடுஞ்சாலையில் ஒரே பைக்கில் சென்ற 5 பள்ளி மாணவர்களில் கார் மோதி இரு மாணவர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஜஸ்டின், புருனோ ஆகிய இரு தனியார் பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். ஆலன், சுஜித், அஜய் ஆகிய 3 மாணவர்கள் படுகாயத்துடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: