விருதுநகர்: ராஜபாளையம் வழியாக பிற வழித்தட ரயில்கள் தற்காலிகமாக இயக்கப்படுகிறது. ஜூன் 20 முதல் 27 வரை 8 நாட்கள் செங்கோட்டை – ஈரோடு விரைவு ரயில் காலை 6.35 மணிக்கு ராஜபாளையம் வரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஈரோடு – செங்கோட்டை விரைவு ரயில் ஜூன் 19 முதல் 26 வரை ராஜபாளையத்துக்கு மாலை 6.45 மணிக்கு வந்து சேரும். தாம்பரம் – செங்கோட்டை அதிவிரைவு ரயில் ஜூன் 21,25,28 தேதிகளில் ராஜபாளையம் வழியாக செல்லும்.
