சென்னை: சாலை விபத்தில் உயிரிழந்த தி.மு.க நிர்வாகிகள் 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவியை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் . சாலை விபத்தில் உயிரிழந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதிற்கு குறைவாக இருந்தால் நிதியுதவி வழங்கப்படும் என்று மதுரை பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
மதுரை பொது குழுவில் அறிவித்தபடி 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். மதுரையில் 1.6.2025 அன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அறிவித்தபடி இதுவரை 22 கழக உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு ரூ. 2 கோடியே 20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
தேனி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ப.மணிகண்டன், ம.சுகன்யா – ஈரோடு மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த வி.கோபாலகிருஷ்ணன் – தருமபுரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பி. சண்முகம் – காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த என்.கார்த்திக் ஆகிய 4 குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் தலா ரூ.10 லட்சம் வீதம் மொத்தம் 40 லட்சம் ரூபாயினை குடும்ப நிவாரண நிதியாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.



