×

ஆலங்குளம் அரிவாள் வெட்டு சம்பவத்தில் மேலும் 6 பேர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் சர்ச் தெருவிற்குள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 10 பேர் கொண்ட மர்மகும்பல் முகமூடி அணிந்து இருசக்கர வாகனத்தில் புகுந்து சாலையோரங்களின் நின்று கொண்டிருந்த 6 இளைஞர்களை கத்தி உள்ளிட்ட பல்வேறு பயங்கர ஆயுதங்களுடன் வெட்டினர்.இதில் நெட்டூரைச் சேர்ந்த ரமேஷ் (49), அவரது மகன் அருள் மாறன் (23), சந்தோஷ்குமார் (21), ராயப்பன் (18), ராம்குமார் (20), மாடசாமி (19) ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர்.

மேலும் வெறி அடங்காத முகமூடி அணிந்த மர்ம கும்ப கும்பல் அங்கிருந்து நெல்லை மாவட்டம், பிரம்மதேசம், மானூர் தெற்குப்பட்டி உள்ளிட்ட 4 பகுதிகளுக்கு இருசக்கர வாகனங்களில் வேகமாக சென்று கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் வரும் வழிகளில் எல்லாம் பார்ப்பவர்களை தாக்கி பணம் பறிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். தெற்குப்பட்டி பகுதியில் நின்று கொண்டிருந்த முபாரக்(30) மற்றும் அப்துல் ரகுமான்(35) இருவரையும் வெட்டினர்.

இந்த சம்பவத்தில் காயம் அடைந்த 8 பேரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் 12 பேரை போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில், நெல்லை பிரம்மதேசம் பகுதியைச் சேர்ந்த சண்முகக்குட்டி என்கிற சண்முகசுந்தரம், நந்து,வேல்கார்த்திக், கோவில்குளத்தைச் சேர்ந்த இசக்கி ராஜா, சிறுகன்குறிச்சியைச் சேர்ந்த பேச்சிமுத்து, தென்காசி மாவட்டம் நெட்டுரைச் சேர்ந்த சண்முகநாதன் என்கிற ராஜா ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதில் கைது செய்யும்போது தப்பியோட முயன்ற 5 பேருக்கு கையில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் மொத்தம் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags : Alankulam ,cutting ,Tenkasi ,Nettur Church Street ,Tenkasi district ,
× RELATED திருமுடிவாக்கத்தில் தொழிற்சாலை...