×

டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் புதுவை முதல்வர் பங்கேற்கவில்லை

புதுச்சேரி: டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்க போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்று நடக்கும் என்டிஏ கூட்டணி முதல்வர்கள் கூட்டத்தையும் புறக்கணித்துள்ளார். ரங்கசாமி பேச வேண்டிய கருத்துகளை அறிக்கையாக தயார் செய்து உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்து 12 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இந்தியாவின் நீண்ட காலம் தொடர்ந்து பதவியில் இருக்கும் பிரதமர் என்ற சாதனையை இன்று (ஜூன் 10) படைத்துள்ளார். இதையொட்டி டெல்லி பாரத் மண்டபத்தில் இன்று என்டிஏ கட்சிகளின் கூட்டம் நடக்கிறது. இந்த என்டிஏ கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள், மாநில முதல்வர்கள், பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக உயர் மட்டத் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி 2 வது முறையாக ஆட்சியை அமைத்துள்ள நிலையில் தேர்தலில் வென்ற பிறகு முதல்வர் ரங்கசாமி டெல்லி செல்லவில்லை. இந்நிலையில் என்டிஏ தலைவராக புதுச்சேரியில் உள்ள முதல்வர் ரங்கசாமி இக்கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார். தமிழக முதல்வர் விஜய் இக்கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் முதல்வர் ரங்கசாமி இக்கூட்டத்தில் பங்கேற்க விமான டிக்கெட் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. முக்கியமான நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர்கள் பங்கேற்க மத்திய அரசு கடிதம் அனுப்பியும் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்ற முடிவை ரங்கசாமி எடுத்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : Puducherry ,Chief Minister ,Rangaswamy ,NITI Aayog ,Delhi ,NDA ,Home Ministry… ,
× RELATED தமிழ்நாட்டில் நாளை மறுநாள் 18...