×

ராமர் கோயிலில் கோடிக்கணக்கில் ரூபாய் மாயம்: அகிலேஷ் குற்றச்சாட்டு

லக்னோ: சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிடுகையில்,அயோத்தி ராமர் கோயிலுக்கு காணிக்கையாக பெறப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராமர் கோயிலில் நன்கொடையாகப் பெறப்பட்ட கோடிக்கணக்கான பணம் காணாமல் போயுள்ளது என்பது, ராமர் பக்தர்களுக்கு மிகவும் வருத்தமளிக்கும் செய்தி. இதில் அரசின் மவுனம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது குறித்து நீதிமன்றம் தானாகவே வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Ram ,Akhilesh ,Lucknow ,Samajwadi Party ,Ayodhya Ram temple ,temple ,
× RELATED எஸ்ஐஆர் பணியின் போது சந்தேக...