×

பெரம்பலூர் அருகே முன்னாள் சென்ற டிராக்டர் மீது அரசு பேருந்து மோதிய விபத்து; குழந்தை பலி

பாடாலூர்: ஈரோடு மாவட்டம் சிவகிரிக்கு கரும்பு வெட்ட சென்ற தொழிலாளர்கள் 17 பேர் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கு கரூரிலிருந்து பண்ருட்டிக்கு டிராக்டரில் திரும்ப சென்றுக் கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற டிராக்டர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் ஆலத்தூர் தாலுகா மாவட்டம் பாடாலூர் மேம்பாலத்தில் சென்றபோது கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து ஒன்று இன்று அதிகாலை சுமார் 5 மணி பத்து நிமிடம் அளவில் பின்னால் வந்து திடீரென மோதியது.

இந்த விபத்தில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள குயிலாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராமு மகள் குணஸ்ரீ (5) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டிராக்டரில் பயணம் செய்த குயிலப்பாளையம் கிராமத்தை சேர்ந்த நாகமுத்து மனைவி செங்கேணி (47) நாகமுத்து (57) நாகமுத்து மகள் நவீந்திரா (18) ராஜேந்திரன் மனைவி கல்யாணி (60) மணிபாலன் மகன் சிவனேசன் (24) பாலூரை சேர்ந்த ராமமூர்த்தி மனைவி சரஸ்வதி (42) இவரது மகள் தமிழ் இனியா (15) ரமேஷ் மகள் அனிதா (18) பாலையூரை சேர்ந்த தண்டபாணி மகன் ராமமூர்த்தி (41) உள்ளிட்ட ஒன்பது பேரும் காயங்கள் அடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாடல் ஒரு போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று விபத்துகளை சிக்கலில் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் அரசு விரைவு பேருந்து டிரைவரான விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தகுடியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலை ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பாதிக்கப்பட்ட போக்குவரத்தை போலீசார் சீர் செய்தனர்.

Tags : Perambalur ,Batalur ,Sivagiri, Erode district ,Karur ,Panruti ,Cuddalore district ,Trichy Chennai National Highway ,Perambalur Alathur ,
× RELATED நிதி ஆயோக் கூட்டத்தில்...