ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காளியூரைச் சேர்ந்த வள்ளியம்மாள் (50) என்பவர் தள்ளுவண்டி கடை வைத்து நடத்தி வருகிறார். கணவர் இறந்துவிட்ட பிறகு விபத்தில் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட நிலையில் வள்ளியம்மாள் மற்றும் அவரது தாய் காளியூரில் தள்ளுவண்டியில் பலகாரம் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெரிய கொடிவேரி பேரூர் கழக தவெக செயலாளர் சசிகுமார் கார் மோதி வள்ளியம்மாளின் தள்ளுவண்டி கடை சேதமடைந்துள்ளது. இது குறித்து வள்ளியம்மாள் கேட்டபோது சசிகுமாரும் அவரது ஆதரவாளரும் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் வள்ளியம்மாளுக்கு ஆதரவாக பேசியுள்ளனர்.
மேலும் அவர்களை தட்டி கேட்டதில் சசிகுமார் மற்றும் அவரது ஆதரவாளரும் அவரை தாக்கியதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தகவலறிந்த பங்களாபுதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட வள்ளியம்மாள் பேசியபோது, சட்டமன்ற தேர்தலின் போது தவெகவிற்கு ஆதரவாக தானும், தனது தாயாரும் வாக்கு சேகரித்தாக கூறினார்.
இதனிடையே தனக்கு அதே கட்சியினரால் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாக கூறியுள்ளார். தனது உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு தவெக நிர்வாகிகள்தான் காரணம் என்று வள்ளியம்மாள் குறிப்பிட்டுள்ளார்.
