சென்னை: எதுவும் தெரியாது, ஆனால் மக்களை ஏமாற்ற விஜய் அண்ணாவிற்கு தெரியும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். விஜய் அண்ணா உங்கள் தலைமையிலே தமிழ்நாட்டில் இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ? என்பது நமக்கும் தெரியாது, மக்களுக்கும் தெரியாது காலம் தான் பதில் சொல்லும். அதுவரை பொறுமையாக கடந்து செல்ல வேண்டுமா என மக்களே தீர்மானிக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமானால் கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் சட்டம் ஒழுங்கை சீர் செய்வதிலே ஒரு நாள் கூட தாமதித்தால் என்ன ஆகும் என்பதை நாடு பார்க்கிறது. ஓட்டு போட்ட மக்கள் யாரென்று எம்எல்ஏக்களுக்கு தெரியாது. எம்எல்ஏக்களுக்கு தொகுதி எதுன்னு தெரியாது; என்ன ஒரு மாற்றம் பாருங்கள். ‘தேர்ந்தெடுத்த எம்எல்ஏக்களுக்கும், அமைச்சர்களுக்கும், முதல்வருக்கும் அனுபவம் தெரியாது, வரலாறு தெரியாது. தியாகம் தெரியாது, பிரச்சனைகளும் தெரியாது, நிர்வாகம் தெரியாது, தொகுதியும் தெரியாது. தொகுதி மக்களின் உரிமையும் தெரியாது, ஆளுமையும் தெரியாது, அதிகாரமும் தெரியாது, அரவணைப்பும் தெரியாது.
