சென்னை: பா.ஜ.க. – த.வெ.க. பெயர்கள் வெவ்வேறானாலும் ஜனநாயகத்தைச் சிதைக்கும் செயல்பாடுகளால் ஒன்றாகிவிட்டனர். தேர்தல் முடிவுக்கு பிறகு எதிர்க்கட்சி இரண்டாக உடைக்கப்படுகிறது. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களில் பெரும்பகுதியினர் தனிக்குழுவாக பிரிந்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் என்று திமுக குற்றம் சாட்டியுள்ளனர்.
