×

அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்தால் தவெகவின் அழிவை யாராலும் தடுக்க முடியாது: தற்கொலை செய்த நிர்வாகியின் மற்றொரு வீடியோ வைரல்

திருவிடைமருதூர்: அதிமுக எம்எல்ஏக்கள் தொடர் ராஜினாமா செய்ய வைத்தால், தவெகவின் அழிவை யாராலும் தடுக்க முடியாது என்று தற்கொலை செய்து கொண்ட அதிமுக நிர்வாகியின் மற்றொரு வீடியோ வைரலாகி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள திருப்பனந்தாள் வளையல்காரர் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன்(37). அதிமுக தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர்.

தேர்தலுக்கு பின் அதிமுகவில் நிலவிய பிரச்னைகளால் மன உளைச்சல் ஏற்பட்டு, எடப்பாடி பழனிசாமிக்கு உருக்கமான வீடியோ பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விட்டு கடந்த 31ம்தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மகேந்திரன் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு பேஸ்புக்கில் அவர் வெளியிட்ட மற்றொரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது: தவெக தலைவரும், முதல்வருமான விஜய்க்கு தான் இந்த பதிவு.  தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், 108 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்து விட்டு, மக்களிடம் முறையிட்டு மீண்டும் தேர்தலில் நின்று வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து கொள்ளுங்கள்.

அதை விடுத்து விட்டு, அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து, குதிரை பேரம் செய்து நீங்கள் ஆட்சியை தக்க வைக்க முயற்சிக்கிறீர்கள் என்று சொன்னால், இந்த மக்கள் மற்றும் இளைஞர்கள் பார்த்து கொண்டிருக்க மாட்டார்கள். மக்கள் மாற்றத்தை விரும்பி தான் உங்களுக்கு வாய்ப்பு தந்தார்கள். ஆனால் திமுக, அதிமுக செய்யாத தில்லுமுல்லுகளை செய்து கொண்டிருக்கிறீர்கள். இது தொடர்ந்தால் தவெகவின் அழிவை யாராலும் தடுக்க முடியாது.  இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Tags : AIADMK MLAs ,Thaveka ,Thiruvidaimarudur ,AIADMK ,Thiruppananthal Vayalkarar Street ,Thanjavur ,
× RELATED தவெக எம்எல்ஏ வெற்றி கொண்டாட்டத்தில்...